தொழில் செய்யாமல் செல்வம் ஈட்டுவது எப்படி என கூறினால் எம்மைப்போன்ற இளம் அரசியல்வாதிகளுக்கும் அது மிகப்பயனுள்ளதாக இருக்கும் !

முழு நேரம் அரசியலில் ஈடுபட்டு தொழில் செய்யாமல் 27 கோடி செல்வம் ஈட்டுவது எப்படி என்பது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க எமக்கும் கூறினால் எம்மைப்போன்ற இளம் அரசியல்வாதிகளும் அது மிகப்பயனுள்ளதாக இருக்கும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குண்டசாலை அமைப்பாளர் ரிஷாட் மஃரூப் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் விடுதலை முன்னனியின் நீண்ட கால உறுப்பினரும் அமைச்சருமான வசந்த சமரசிங்கவின் சொத்துவிவகாரம் இன்று பேசுபொருளாகியுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தங்கள் கட்சி ஆதரவாளர்களிடம் நிதி உதவியில் காலத்தை ஓட்டுவதாக எதிர்கட்சியில் இருக்கும் போது பகிரங்கமாக கூறிவந்த வசந்த சமரசிங்க இன்று தான் முழு நேர அரசியலில் ஈடுபட்ட அதேநேரம் தொழில்களில் முதலீடு செய்து 27 கோடி சொத்து சேர்த்ததாக கூறுகிறார்.
தற்போது முழு நேரம் அரசியலில் ஈடுபடும் எம்மைப்போன்ற இளம் அரசியல்வாதிகள் எவ்வாறு ஊழல் செய்யாமல் தொழிலும் செய்யாமல் முழுநேர அரசியலில் ஈடுபட்டு கோடிகளில் பணம் ஈட்டுவது என்பது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க எமக்கும் கூறினால் எம்மைப்போன்ற இளம் அரசியல்வாதிகளும் அது மிகப்பயனுள்ளதாக இருக்கும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குண்டசாலை அமைப்பாளர் ரிஷாட் மஃரூப் குறிப்பிட்டார்.
கட்டடம் ஒன்றை போலி ஆவணம் தயாரித்து குத்தகைக்கு விட்டு மோசடி வழக்கில் சந்தேக நபரான வசந்த சமரசிங்க எவ்வாறு சொத்து சேர்ர்திருப்பார் என்பதை எம்மால் ஊகித்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் கூறினார்.



