வீடொன்றுக்குள் புகுந்து பணத்தையும் , ATM அட்டையையும் திருடி தப்பிச்சென்ற யுவதி, ATM அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்த போது CCTV மூலம் சிக்கினார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்சிலி மாஸ்க் டிவிசனில் வீடொன்றுக்குள்புகுந்து களவாடிய ஒரு தொகை பணத்துடன் 21 வயது யுவதியை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை(18) மாலை கைது செய்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து 95 ஆயிரம் ரூபாய் பணம் , வங்கி தானியங்கி பணம் பெறும் அட்டை ( ATM CARD) மற்றும் ஆள் அடையாள அட்டை என்பன அந்த யுவதியால் திருடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த ATM அட்டையை பயன்படுத்தி வங்கி ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.
அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் உதவியுடன் சந்தேக நபரான 21 வயதுடைய யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த யுவதியிடமிருந்து 195,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபரான அந்த யுவதியை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்



