News

வாக்குறுதியை நிறைவேற்றி மூன்றாம் மாதக் கொடுப்பனவையும் மக்களுக்கே அன்பளிப்புச் செய்த பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர்


நூருல் ஹுதா உமர்
பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த மூன்றாம் மாதக்கொடுப்பனவையும் தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய சாளம்பைக்கேணி – 03 முதலாம் வட்டாரத்தில் ஒரு குடும்பத்திற்கு  (19) அன்பளிப்பு செய்துள்ளார்.


இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்;

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையுடைய குடும்பத்திற்கு குறித்த பணத்தொகையை கையளிக்கும் நிகழ்வில் பிரமுகர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும் மத்தியமுகாம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைய எம்.ஏ.நளிர் அவர்களினால் 2000 லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்  தாங்கி பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button