News

“ஐஸ்லாந்து” ஜனாதிபதி பற்றி “பொய்ஸ்லாந்து” காரர்கள் பேசுவதே வேடிக்கையான விடயம் !

“ஐஸ்”லாந்து ஜனாதிபதி பற்றி “பொய்ஸ்”லாந்து காரர்கள் பேசுவதே வேடிக்கையான விடயம் என குண்டசாலை பொதுஜன பெரமுன அமைப்பாளர் ரிஷாட் மஃரூப் குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

இன்று நாமல் ராஜபக்‌ஷ அவர்களின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத அரசு “ஐஸ்”லாந்து ஜனாதிபதி என ஏளனமாக பேசுகிறார்கள்.தான் தவறு செய்திருந்தால் ஊடகங்களில் ஷோ காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ராஜபக்‌ஷ பகிரங்கமாக கூறிவிட்டார்.

இவ்வாறிருக்க 2/3 பெரும்பாம்மையை கையில் வைத்திருக்கும் அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்களை உசுப்பேற்றி வருகிறது.

ஆட்சிக்கு வரும்முன் பொய்யை மூலதனமாக கொண்டு வாழ்ந்த தோழர்கள் அதிகாரம் வந்தபின்னரும் அதையே தொடர்வதாக ரிஷாட் மஃரூப் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button