News

அம்பாறை, மட்டக்களப்பு, மாவட்டங்களில் மற்றும் ஊவாவில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

மேல், சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.



மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.



மின்னல் தாக்கங்கள், பலத்த காற்று காரணமாக ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button