News

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இடைநீக்கம் செய்தது.

அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. நிர்வாக குறைபாடுகள் காரணமாக உடனடியாக இந்த இடைக்கால தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



ஐ.சி.சி-யின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றை செயல்படுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இருப்பினும் 2026-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரிலும், 2028 ஒலிம்பிக் போட்டிகளிலும் அமெரிக்க அணி பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என ஐ.சி.சி தெரிவித்துள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button