பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்த மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம்..
பிறந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்த மனைவியின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லக்னோவில் பூர்வா [Baniyaani பகுதியில் வசித்து வரும் ராகுல் – அனிதா தம்பதியினரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அனிதா கூறியதே சண்டைக்குக் காரணமானதாக கூறப்படுகின்றது.
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
தீவிர சிகிச்சைக்குப் பின் ஆபத்தான கட்டத்தை கடந்த அனிதா, கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளதாக கூறப்படுகின்றது. தாய் வீட்டுக்கு செல்ல வேண்டுமென கூறியதால் மூக்கை அறுத்த சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.