நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கே எதிரானவர்கள் !

நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கே எதிரானவர்கள் என ஜாதிக ஹெல உறும முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கே எதிரானவர்கள். இன்று முஸ்லிம்கள் கூரகல , முஹுது மஹாவிஹாரை உள்ளிட்ட பல பௌத்த மத ஸ்தலங்களை ஆக்கிரமித்துள்ளனர்.நாம் அதற்கு எதிராகவே பேசுகிறோம்.அது தவறா ?
இன்று இஸ்ரேல் சபாத் மத ஸ்தலங்கள் அமைப்பது பற்றி கேற்கிறீர்கள். அதில் என்ன தவறு உள்ளது.இஸ்ரேலில் பௌத்த மதஸ்தளங்கள் உள்ளன. அங்கே பௌத்தர்கள் வசிக்கவில்லை.இஸ்ரேலில் 20 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அங்கே பள்ளிவாயல்கள் உள்ளன. இங்கே இஸ்ரேல் மதஸ்தலங்கள் அமைப்பதில் என்ன தவறு உள்ளது.அரசியல் அமைப்பின் பிரகாரம் யூதர்கள் இங்கே அவர்களது மதத்தை பின்பற்ற சகல உரிமைகளும் உள்ளன.
இங்கே ஆர்ப்பாட்டம் செய்யும் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இஸ்ரேலுக்கு சென்று அங்கே ஹமாஸ் செய்யும் அநியாயங்களை பார்க்க வேண்டும்.சண்டையை துவக்கிவைத்ததே ஹமாஸ் அமைப்புதான்.ஹமாஸ் அப்பாவிகளை கொலைசெய்யவில்லையா ? இஸ்ரேல் இராணுவம் மீது மட்டுமா ஹமாஸ் குறிவைக்கின்றனர். இஸ்ரேலில் அப்பாவிகள் கொலை செய்யப்படவில்லையா ? மக்களை கேடயாமாக ஹமாஸ் பயன்படுத்துவதால் தான் அப்பாவிகள் கொலை செய்யப்படுகிறார்கள் அதற்கு ஹமாஸே பொறுப்பேற்கவேண்டும் என ஜாதிக ஹெல உறும முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் கூறினார்.



