News
உடலில் கற்களை கட்டி களனி கங்கையில் மூழ்கடிக்கப்பட்ட நபர்

களனி கங்கையிலிருந்து அழுகிய நிலையில் ஆடைகள் ஏதுமற்ற நிலையில் நபர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் அணிந்திருந்த காற்சட்டையின் கீழ்ப்பகுதி கட்டப்பட்டிருந்த நிலையில் அதற்குள் கற்கள் நிரப்பப்பட்டு, இடுப்புடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கற்களைப் பயன்படுத்தி உடலை ஆற்றுக்குள் மூழ்கடிக்க முயற்சித்திருக்கலாம் என கடுவலை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



