News

LGBTQ+ வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சுற்றுலா மேம்பாட்டு பிரசாரம் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டது.



இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின்  LGBTQ+ தொடர்பான நிகழ்வுகள் குறித்த அண்மைய பொதுவிவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில்,

இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

LGBTQ+ வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து குறிப்பிட்ட சுற்றுலா மேம்பாட்டு பிரசாரம் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்தகைய முன்மொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இவை இலங்கையை அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க இடமாக வலுப்படுத்துவதற்கான பரந்த விவாதங்களின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்காலத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும், தேசிய சுற்றுலா முன்னுரிமைகள் மற்றும் சமூக ஒற்றுமை என்ற கட்டமைப்பிற்குள் கவனமாக மதிப்பீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை அனைத்து பாலினங்கள் மற்றும் சமூகங்களையும், அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களையும் மதிக்கும் நாடு.  ஆனால், இந்த மரியாதையை குறிப்பிட்ட பாலியல் நடத்தைகள் அல்லது செயல்பாடுகளை ஆதரிப்பதாக தவறாக புரிந்து கொள்ளக் கூடாது.  உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தளங்களில் தனிநபர்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்குவதே எங்கள் நோக்கம்.

ஒரு நாகரிக சமூகமாக, இத்தகைய விடயங்களை முதிர்ச்சியுடனும் புரிதலுடனும் அணுகுவது அவசியம். எந்தவொரு குடிமகனும் அல்லது பயணியும் அவர்களின் பாலின அடையாளம் அல்லது பாலின நோக்குநிலையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படக் கூடாது.

நமது பலமாக நாட்டின் கௌரவம், நியாயம் மற்றும் அனைவருக்குமான பரஸ்பர மரியாதையை உயர்த்திப் பிடிப்பதே உள்ளது,” என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் சமூகத்தின் சில பிரிவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதை ஒப்புக்கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சு, அரசாங்கம் இந்த உணர்வுப்பூர்வமான விடயங்களை கவனமாக கையாள்கிறது எனவும், சுற்றுலா மேம்பாடு ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் இலங்கை சமூகத்தை வரையறுக்கும் பகிரப்பட்ட மதிப்புகளில் வேரூன்றியுள்ளது எனவும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.



“இலங்கை அடையாளத்தின் முழு அளவையும் கொண்டாடுவதோடு, சுற்றுலா அனைத்து குடிமக்களுக்கும் பெருமை மற்றும் வளமையின் ஆதாரமாக தொடர வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் இந்த விடயத்தை புரிதலுடனும் அமைதியுடனும் அணுகுமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என அமைச்சு மேலும் கூறியுள்ளது.

**இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரின் அறிக்கை**

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையின்படி, இது உலகளாவிய பயணிகளை ஈர்க்கும் பல முயற்சிகளில் ஒன்றாகும்; இது அரசாங்கத்தின் முக்கிய சுற்றுலா உத்தியில் மாற்றத்தை குறிக்கவில்லை. இலங்கையின் தனித்துவமான கலாசார பாரம்பரியம், ஆரோக்கிய மற்றும் இயற்கை அனுபவங்கள், சாகச சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, உலகின் மிகவும் புலம்பெற்ற பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை நிலைநிறுத்துவதே தேசிய அணுகுமுறையாக உள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 12ஆவது பிரிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி, இனம், மதம், வயது, பாலினம், பால் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு இலங்கைக் குடிமகனுக்கும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் சுற்றுலா மற்றும் பொதுமக்கள் ஈடுபாட்டிற்கு வழிகாட்டுகின்றன, இலங்கை கௌரவம், நியாயம் மற்றும் அனைவருக்கும் மரியாதை ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடமாக தொடர்ந்து இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இலங்கையை உலகிற்கு ஒரு அரவணைப்பு, பன்முகத்தன்மை மற்றும் காலமற்ற கவர்ச்சி கொண்ட இடமாக வெளிப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button