News

எனது காதலை ஏற்க மறுத்ததாலே சிறுமியின் முகத்தை ஒரு நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து இணையத்தில் பகிர்ந்தேன் என கைது செய்யப்பட்ட பாடசாலை காலி மேலதிக நீதவான் முன்னிலையில் தெரிவிப்பு

பாடசாலை மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவன், காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ரூ.200,000 தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



குறித்த மாணவன், அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருடைய வாக்குமூலத்தை கேட்டு பொலிஸார் மற்றும் நீதவான் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.



பாடசாலை மாணவியின் நண்பர் ஒருவர் சிறுமியின் புகைப்படம் ஆன்லைனில் பகிரப்படுவதாக அவரது மூத்த சகோதரருக்கு தெரிவித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



அவரது சகோதரர் உடனடியாக காலி சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்ததால் மேற்படி சம்பவம் தொடர்பில் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க முடிந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



விசாரணையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலைத் தேடி சிறுவன், சிறுமியைப் பின்தொடர்ந்து வந்ததாகவும், சிறுமி – சிறுவனை நிராகரித்த பிறகு, அவரது முகத்தை ஒரு நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து அதை ஆன்லைனில் பதிவேற்றியதாகவும் மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.



இதனைகேட்டு நீதிபதி மற்றும் பொலிஸார் அதிர்ச்சிக்குள்ளான நிலையில்,

தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு துன்புறுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ கூடாது என்று நீதவான் கடுமையாக எச்சரித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button