News

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருள் கடத்தலின் பின்னணியில் ஜே.வி.பி முக்கியஸ்தர் !

தங்காலை பிரதேசத்தில் பாரிய போதைப்பொருள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சனா என்பவர் ஜே வி பியின் முக்கிய உறுப்பினர் என ஜே வி பி முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்தின் கடைசி கூட்டத்தை நடத்திவிட்டு போது புவக்தண்டாவே சனா வீட்டிலேயே உணவு உற்கொண்டதாகவும் புவக்தண்டாவே சனா கடந்த காலங்களில் ஜே வி பி யிற்கு பாரிய அளவில் நிதி வழங்கியுள்ளதாகவும் ஜே வி பி முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

புவக்தண்டாவே சனா’ டுபாயில் இருக்கும் உனாகூருவே சாந்தவின் நண்பராவார்.உனாகூருவே சாந்த இவருக்கு பெரும் தொகை பணம் அனுப்புகிறார்.இதனால் இவர் கடந்த காலங்களில் ஜே.வி.பிக்கு பெருவாரியாக செலவு செய்துள்ளார்.

அதனாலே அவர் கைது செய்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கலாம்.போதை பொருட்கள் கொண்டு வருவதும் அரசாங்கம், அதை பிடிப்பதும் அரசாங்கம் என்பதாகவே தோன்றுகிறது.

தென்பகுதிக்கு ஜே.வி.பி தலைவர்கள் செல்லும் போது பகல்-இரவு சாப்பாட்டை வழங்குவது இவர்தான் என குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button