News

மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 13ஆவது உலக முதியோர் தினம் 2025.

மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், 13ஆவது தடவையாக உலக முதியோர் தினத்தை, ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.8.30 மணிக்கு, மடவளை மதீனா தேசிய பாடசாலையின், அஷ்ர்ஃப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளது.

இவ்வைபவத்திற்குப் பிரதம அதிதியாகக எமது ஊரைச்சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபரான அல்ஹாஜ் M.H.A.புஹாரி அவர்களின் மகன் Dr.A.B.M.Aslam அவர்களும், கௌரவ அதிதியாக எமது ஊரைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை Mrs.A.A.Mumthas அவர்களின் மகன் Dr.M.M.M.Ilham அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.



அன்றைய தினத்தில்
2024, 2025ஆம் ஆண்டுகளில், ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற 53 மாணவர்கள், பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கிப் பாராட்டப்படவுள்ளனர்

. 2024ஆம் ஆண்டு GCE O/L பரீட்சையில் ஆங்கிள பாடத்தில் A சித்தி பெற்று உயர்தரத்திற்கு தகுதி பெற்ற 33 மாணவர்களுக்கு, ஜலீல் டீச்சரின் நினைவுப்பரிசு வழங்கப்பட உள்ளது

# தேர்ந்தெடுக்கப்பட்ட 25 முதியோர்கட்கு. ரூபா 5000/= பெறுமதியான போஷாக்கு உணவுப்பொதியும் வழங்கப்பட உள்ளது

# நீண்டகாலம் சேவையாற்றி ஓய்வு பெற்று 75வயதைப் பூர்த்தி செய்தவர்களுள் ஆசிரிய ஆலோசகரான (கணிதம்) அல்ஹாஜ் AM ஹுசைர் அவர்களும், அல்ஹாஜ் S.M.சஃபீக், அல்ஹாஜ் AMஃபாரூக் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர்.

எனவே இவ்வைபவத்திற்குக் குறிப்பாக, எமது சங்கத்தின் சகல அங்கத்தவர்களையும், அங்கத்தவராவதற்கு தகுதி பெற்றவர்களையும் மடவளையிலுள்ள சகல சங்கங்கள், நிறுவனங்களின் நிருவாகக்குழு உறுப்பினர்களையும், எமது சங்கத்திற்கு நிதியுதவிய சகல அன்பளிப்பாளர்களையும், ஆதரவாளர்களையும், பொதுவாக சகல மடவளை வாசிகளையும் அன்பாய் அழைக்கின்றோம்.



தகவல் A.LA. ஜலில்.

செயலாளர்


மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button