News

ஈரானில் புதிதாக 10 டிரில்லியன் கன அடி எரிவாயு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் எண்ணெய்வள அமைச்சர் அறிவிப்பு

தெற்கு ஈரானில் உள்ள பசான் Gas வயலில் புதிதாக 10 டிரில்லியன் கன அடி எரிவாயு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஈரான் எண்ணெய்வள அமைச்சர் மொஹ்சென் பக்நெஜாத் இன்று திங்களன்று தெரிவித்தார்.

இந்தத் தகவலை அவரது அமைச்சகத்தின் செய்தி நிறுவனமான ஷானா வெளியிட்டுள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய எரிவெளி இருப்புகளை வைத்திருக்கும் ஈரான், தனது உற்பத்தியில் பெரும்பகுதியை உள்நாட்டு பயன்பாட்டிற்கு பாவிக்கிறது.  உயர் தேவை மாதங்களில் நாடு எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

“இந்த வயலில் 10 டிரில்லியன் கன அடி எரிவளி உள்ளது. 70% மீட்பு விகிதத்தை கருத்தில் கொண்டால், 7 டிரில்லியன் கன அடி எரிவளியைப் பெற முடியும்,” என பக்நெஜாத் கூறினார்.

இந்த புதிய இருப்பு, வரும் ஆண்டுகளில் ஈரானின் எரிவளி பற்றாக்குறையை சமாளிக்க உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 8 ஆண்டுகள் ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், எரிவளி எடுக்கும் பணிகள் தொடங்க 40 மாதங்கள் ஆகலாம் எனவும் அமைச்சர் மதிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button