ஒக்டோபர் 07… இரண்டு வருடங்களுக்கு முன்னர் காஸா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழியத்தொடங்கியது இது போன்ற ஒரு ஒக்டோபர் 7ம் திகதிதான் … காஸா முழுவதும் தரை மட்டமாக்கப்பட்டதுடன் இஸ்ரேஸ் பொருளாதார ரீதியில் கடுமையாக அடிவாங்கியது

ஒக்டோபர் 07..
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு ஒக்டோபர் 7ம் திகதிதான் இஸ்ரேல் காஸா மீது குண்டு மழை பொழியத்தொடங்கியது.
இன்றுடன் வருடங்கள் 2 முற்றுப்பெறுகிறது.
இந்த 2 வருட யுத்தத்திலும் இஸ்ரேல் அடைந்து கொண்ட இலாபம் எதுவுமில்லை ஆனால் காஸாவோ இழந்து நிற்பது எண்ணிலடங்காதவை.
காஸா மீதான யுத்த ஆரம்பத்தின் பிறகு இஸ்ரேல் பொருளாதார ரீதியாக பலத்த அடி வாங்கியுள்ளது என்பதற்கு சாட்சி அமெரிக்கா இன்று வரை இஸ்ரேலுக்கு வழங்கி வரும் நிதியுதவி.
🔴 கடந்த இரண்டு வருடங்களிலும் அமெரிக்கா பாதுகாப்பு நிதியுதவியாக 21.7 பில்லியன் டொலர்களை இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கிறது சுருக்கமாக சொன்னால் இது அமெரிக்கா காஸா மீது தொடுத்த போர்.
🔴 காஸா முழுவதும் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.
🔴 67144 காஸா மக்களை கடந்த இரண்டு வருடத்தில் இந்த யுத்தம் காவு கொண்டிருக்கிறது. காஸாவின் சனத்தொகையில் 33 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
🔴 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒரு குழந்தை என்ற அளவில் உயிரிழந்திருக்கிறார்கள்.
🔴 169,000 பேர் காயமடைந்திருக்கிறார்கள் இது காஸாவின் சனத்தொகையில் 14 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அமைந்திருக்கிறது.
🔴 4000 குழந்தைகள் ஒரு காலையோ அல்லது இரண்டு கால்களையுமோ இழந்திருப்பதாக யுனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது.
🔴 34 வைத்தியசாலைகளும், 91 கிளினிக் நிலையங்களும் முற்றாக தரைமட்டமாகியிருக்கும் அதே நேரம் 1722 மருத்துவ பணியாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
🔴 அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து வழங்குபவர்கள், தீவிர சிகிச்சை மற்றும் குழந்தை மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றும மூத்த வைத்திய நிபுணர்கள் 18 பேர் அடங்கலாக மொத்தம் 28 வைத்தியர்களை இஸ்ரேல் கடந்த 2 வருடத்தில் கைது செய்து கொண்டு சென்றிருக்கின்றது. இவர்களில் 2 பேர் சித்திரவதை காரணமாக உயிரிழந்துவிட்டனர். காஸாவின் மருத்துவத்துறை சின்னாபின்னமாகி இருப்பதற்கு இதுவும் ஒரு மூலகாரணம்.
🔴 154 குழந்தைகள் உட்பட 459 பேர் பட்டினியின் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர்.
🔴 காஸாவில் நான்கில் ஒரு குழந்தை போஷணை குறைபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. ஐந்தில் ஒரு குழந்தை எடை குறைபாட்டுடன் பிறக்கின்றது.
🔴 அரபு நாடுகள் வழங்கிய நிவாரணப்பொதிகளை பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த 2600 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 19,000 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
🔴 89% ஆன நீர் ஆதார இடங்கள் தரைமட்டாமாகியுள்ளன காஸா மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 6 லீற்றருக்கும் குறைவான நீரையே பருகுகிறார்கள் இது ஒரு மனித உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் நீரின் அளவையும் விட மிகவும் குறைவானதாகும்.
🔴 92% ஆன மக்கள் தமது குடியிருப்புக்களையும், 88% ஆன மக்கள் தமது வியாபார நிலையங்களையும், 62% ஆன மக்கள் தமது சட்டபூர்வ ஆவணங்ளையும் இழந்திருக்கிறார்கள்.
🔴 92% ஆன பாடசாலைகள் அழிக்கப்பட்டிருக்கிறது, 63 பல்கலைக்கழகங்கள் உட்பட 2300 கல்வி நிலையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
🔴 பாடசாலை இடிபாடுகள் காரணமாக 658,000 பாடசாலை மாணவர்களும், 87,000 பல்கலைக்கழக மாணவர்களும் கல்வி கற்க இடமின்றி கைவிடப்பட்டுள்ளனர்.
🔴 780 கல்வியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
🔴 450 குழந்தைகள், 87 பெண்கள் உட்பட 10,800 பேரை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்து கொண்டு சென்றிருக்கிறது.
🔴 300 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
🔴 இந்த எண்ணிக்கை என்பது உலக வரலாற்றில் உச்சக்கட்டமான எண்ணிக்கையாகும். இது வரையில் உலகளவில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தங்களான அமெரிக்க சிவில் யுத்தம், முதலாம், இரண்டாம் உலகப்போர்கள், கொரிய யுத்தம், வியட்நாம் யுத்தம், யூகோஸ்லாவிய யுத்தம், ஆப்கானிஸ்தான் யுத்தம், யுக்ரைன் யுத்தம் ஆகிய யுத்தங்களில் கொல்லப்பட் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கைகளையும் விட அதிகம் என்பது குறிப்பிடப்படக்கூடியது.
மேலே பட்டியலிடப்பட்ட அனைத்தும் காஸா மக்கள் கடந்த 2 வருடத்தில் இழந்தவைகள் இந்தக்காலப்பகுதியில் இஸ்ரேல் சார்பாக இழக்கப்பட்டதோ 1983 பேர் மட்டும்.
ஆனால் நீதியற்ற உலகிற்கோ இத்தனையும் இழந்த காஸா மக்கள் தீவிரவாதிகள் 1983 இராணுவத்தினரை இழந்த இஸ்ரேலியர்கள் அப்பாவிகள்.
By : Razana Manaf
❤



