இஸ்ரேலை அஞ்ச வைக்கும் ஹ*மாஸின் ஆறு தளபதிகள்…. இவர்களை விடுவிக்க இ*ஸ்ரேல் தயங்குவது ஏன்?

By : Razana Manaf
காஸா…
இ*ரேல் – ஹ*ஸ் தரப்பினரால் நேற்று முதல் காஸா பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த முடிவுக்கு உலக நாடுகள் பலதும் வாழ்த்துக்களையும், வரவேற்பினையும், தெரிவித்திருக்கின்றன.
இந்த யுத்த நிறுத்தத்தை செயல் வடிவில் கொண்டுவருவதற்காக முன்னின்று பாடுபட்ட அரபு நாடுகளுக்கு ஹ*மாஸ் அதன் சார்பாக நன்றிகளை தெரிவித்திருக்கிறது.
ஹ*மாஸுடனான கடந்த இரண்டு வருட யுத்தத்திலும் இ*ஸ்ரேல் பொருளாதார ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலத்த அடிகளை வாங்கிவிட்டது அமெரிக்காவின் உதவி இல்லாவிட்டால் இ*ஸ்ரேலினால் இந்த யுத்தத்தில் தனித்து தாக்குப்பிடிக்க முடியாது என்று சொன்னபோதெல்லாம் இதைப்போன்ற பத்து யுத்தங்களை நடத்துவதற்கு இ*ஸ்ரேலிடம் பொருளாதார பலம் உண்டென்று சொன்னவர்கள் இன்று தோல்வியடைந்து நிற்கும் இ*ஸ்ரேலை பார்த்து திகைத்து நிற்கிறார்கள்.
காஸா பகுதியில் வாழும் அப்பாவி பொது மக்களையும், குழந்தைகளையும் இ*ஸ்ரேல் குறிவைத்து கொல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இஸ்ரேலின் கடைசி இராணுவத்தையும் கொன்று போடும் வரை ஹ*மாஸ் போராடியிருக்கும். உலகில் எப்படிட்ட ஆயுதங்களுடனும், நவீன தொழில்நுட்பங்களுடனும், எண்ணிக்கையில் அதிகமாகவும் சக்தி வாய்ந்த இராணுவமாக இருந்தாலும் கூட அவை அத்தனையும் கொரில்லா தாக்குதலுக்கு முன் ஈடு கொடுக்கமுடியாது என்பது உலகிற்கு போராட்டங்கள் கற்றுக்கொடுத்திருக்கும் பாடம்.
காஸாவில் நேற்று முதல் யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்த இஸ்*ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும் இன்று அதிகாலை 5.45 மணிவரை கான் யூனுஸின் வட பகுதியில் இஸ்*ரேல் இராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருப்பததாகவும் அதன் பிறகு படைகள் அங்கிருந்து பின்வாங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹ*மாஸ் மற்றும் இ*ஸ்ரேலுக்கிடையிலான ஒப்பந்தங்களில் முக்கியமான ஒன்று கைதிகள் பரிமாற்றம்.
முன்பு இரு தரப்பினருக்கும் நடைபெற்ற பல சண்டைகளின் போதும், உடன்படிக்கைகளின் போதும் கைதிகள் பரிமாற்றம் பற்றி ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் இஸ்*ரேலிய சிறைகளில் இருக்கும் ஹமாஸின் உயர் தளபதிகளை விடுவிக்க கோரும்போதெல்லாம் இஸ்*ரேல் மறுத்துவிட்டு சாதாரண பொதுமக்களையே விடுவிக்கும்.
ஆனால் இப்போதைய கைதி பரிமாற்றத்தில் மிக முக்கியமான 6 உயர் தளபதிகளை விடுவிக்க வேண்டும் என்று ஹ*மாஸ் தரப்பில் நிபந்தனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. வேறு வழிகள் ஏதுமின்றி இஸ்*ரேல் அதற்கு உடன்பட்டிருக்கிறது. இந்த ஆறு தளபதிகளையும் விடுவிப்பது உண்மையில் இஸ்*ரேலுக்கு மானப்பிரச்சினை ஏனெனில் இவர்களை கண்டு இஸ்*ரேல் அஞ்சுகிறது. இவர்களை விடுதலை செய்யமாட்டோம் என்று 25 வருடங்களாக அடம்பிடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேறு வழியில்லை இது ஹமா*ஸுக்கு கிடைத்த பாரிய வெற்றி.
இஸ்*ரேலிய சிறைகளில் 11,000 க்கு மேற்பட்ட பலஸ்தீனியர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்களில் 3500 க்கு மேற்பட்டவர்கள் எந்தவொரு விசாரணையோ, வழக்கோ இன்றி பல வருடங்களாக வெறுமனே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 290 கைதிகளில் 250 கைதிகளும், மேலும் 1700 கைதிகள் 22 சிறுவர் கைதிகள், 360 உடல்கள் என்பன இஸ்*லினால் முதல்கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்..
25 உடல்கள் அடங்கலாக 47இஸ்ரேலியர்களை ஹ*மாஸ் தரப்பு விடுவிக்கும்.
இஸ்*ரேல் விடுவிக்கும் கைதிகளில் ஆறு பேர் ஹ*மாஸிற்கு மிக முக்கியமானவர்கள்.
🔴 ஹமாஸின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மர்வான் பர்ஹுதி :
பல பாலஸ்தீனியர்களால் எதிர்கால ஜனாதிபதியாகக் கருதப்படும் பத்தாஃ அமைப்பின் மூத்த தலைவர்.
பர்ஹூதி தனது 15வது வயதில் யசீர் அரபாத்தின் பத்தாஃ இயக்கத்தில் தனது அரசியல் செயல்பாட்டைத் தொடங்கினார், 1996 இல் பலஸ்தீன பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 இல் இஸ்ரேலின் “தற்காப்புக் கேடய நடவடிக்கை” யின் போது கைது செய்யப்பட்ட அவர், இஸ்ரேலியர்களைக் கொன்ற தாக்குதல்களுக்காக ஐந்து ஆயுள் தண்டனைகளையும் அதனுடன் சேர்த்து மேலும் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் அனுபவித்து வருகிறார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பர்ஹூதி தலைமையிலான பயங்கரவாதத்தின் சின்னங்கள்” கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் எந்த கட்டத்திலும் சேர்க்கப்படாது என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். அதனால் பர்ஹூதியை விடுதலை செய்யமுடியாது என இஸ்*ரேல் அறிவித்திருக்கிறது.
🔴 ஹமாஸின் பட்டியலில் உள்ள மற்றொரு முக்கிய நபர் அப்துல்லா பர்ஹூதி, “ஹமாஸின் பொறியியலாளர்” என்று அழைக்கப்படுகிறார்.
வெடிபொருட்களில் நிபுணரான இவர், இஸ்ரேலில் பல குண்டுவெடிப்புகளை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 67 ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகிறார் – இஸ்ரேலிய நீதிமன்றத்தால் இதுவரை வழங்கப்பட்ட மிக நீண்ட சிறைத்தண்டனை இதுவாகும்.
மர்வான் பர்ஹூதியின் உறவினரான அப்துல்லா பர்ஹூதி 2001 ஆம் ஆண்டு ஜெருசலேமில் நடந்த ஸ்பாரோ உணவக குண்டுவெடிப்பு, 2002 ஆம் ஆண்டு கஃபே மூவ்மென்ட் வெடிப்பு மற்றும் ஐந்து அமெரிக்கர்கள் உட்பட 66 இஸ்ரேலியர்கள் உயிரிழந்த ஹீப்ரு பல்கலைக்கழக குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல உயர்மட்ட தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
1996 இல் படுகொலை செய்யப்பட்ட யஹ்யா அய்யாஷுக்குப் பிறகு ஹமாஸின் சிறந்த குண்டுவெடிப்பாளர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் அவரை விவரிக்கின்றன.
🔴 ஹமாஸின் பட்டியலில் மூன்றாவதாக இருப்பவர் இப்ராஹிம் ஹமாத்.
இப்ராஹிம் ஹமாதை இஸ்ரேல் அதன் மிகவும் ஆபத்தான கைதிகளில் ஒருவராகக் கருதுகிறது.
இரண்டாவது இன்திபாலாவின் போது மேற்குக் கரையில் ஹமாஸின் இராணுவப் பிரிவை வழிநடத்திய அவர், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின்னர் 2006 இல் கைது செய்யப்பட்டார். 46 இஸ்ரேலியர்களைக் கொன்ற தாக்குதல்களை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் 54 ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வருகிறார்.
ஹமாத் பிர்சீட் பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் இளங்கலைப் பட்டமும், சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சிறையில் இருந்தபோது, பலஸ்தீனக் கொள்கையின் வரலாறு குறித்த ஆய்வுகளை எழுதியுள்ளார், மேலும் எட்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் கழித்துள்ளார்.
🔴 பேச்சுவார்த்தைகளில் அடிக்கடி எழுப்பப்படும் மற்றொரு பெயர் அஹ்மத் சதாத், பலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் (PFLP) பொதுச் செயலாளர்.
2006 ஆம் ஆண்டு ரமல்லாவில் உள்ள பலஸ்தீன ஆணையகத்தின் தலைமையகத்தை இஸ்ரேல் முற்றுகையிட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், 2001 ஆம் ஆண்டு இஸ்ரேலிய சுற்றுலா அமைச்சர் ரெஹாவம் ஜீவியின் படுகொலைக்கு பொறுப்பேற்ற குழுவை அவர் வழிநடத்தியதற்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
தற்போது 70 வயதில இருக்கும் சதாத், 1976 முதல் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மேலும் நீண்ட காலம் தனிமையில் கழித்துள்ளார். தனது சிறைவாசத்தின் போது, இஸ்ரேலின் தனிமைச் சிறைவாசக் கொள்கையை விவரிக்கும் “எக்கோ ஆஃப் த சயின்ஸ்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.
🔴 இந்தப் பட்டியலில் ஐந்தாம், ஆறாம் இடங்களில் இருப்பவர்கள் இரண்டாம் இன்திபாலாவின் மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றான நெதன்யாவில் 2002 ஆம் ஆண்டு நடந்த பார்க் ஹோட்டல் குண்டுவெடிப்புக்கு தண்டனை பெற்ற அப்பாஸ் அல்-சயீத் மற்றும் 46 ஆயுள் தண்டனைகளை அனுபவித்து வரும் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் மூத்த தளபதி ஹசன் சலாம் ஆகிய இருவரும்.
இஸ்ரேல்-பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளில் கைதிகள் பரிமாற்றக் கோப்பு கைச்சாத்திடப்படும் ஒவ்வொரு முறையும், அரசியல் சின்னங்கள் மற்றும் இராணுவத் தலைவர்கள் என இந்த ஆறு பேரின் பெயர்களும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும். ஹ*மாஸைப் பொறுத்தவரை, அவர்களின் விடுதலை ஒரு குறியீட்டு மற்றும் மூலோபாய வெற்றியைக் குறிக்கும்.
இருப்பினும், இஸ்*ரேலைப் பொறுத்தவரை, அவர்கள் “சிவப்பு கோடுகளை” பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் அவர்களின் இருப்பு பாதுகாப்பு கவலைகளுக்கு மிகவும் மையமான ஒன்றாக கருதப்படும் அதனால் அவர்கள் ஒருபோதும் விடுவிக்கப்பட மாட்டார்கள்.
ஆனால் இப்போது ஒருவரை தவிர ஏனைய ஐவரையும் விடுவிப்பதானது ஹ*மாஸிற்கு கிடைத்த தந்திரோபாய வெற்றி.
❤



