News

அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவமா? என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு அக்குழுவினரிடம் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியது

அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவமா? என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு அக்குழுவினரிடம் வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.



இந்த நிலையில், ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்ட விவகாரத்தில் மரியாவையும், நோபல் தெரிவு குழுவினரையும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் கடுமையாக சாடியுள்ளார்.



இது தொடர்பில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங்கின் பதிவில்,



“ ஜனாதிபதி  ட்ரம்ப் தொடர்ந்து பல போர்களை முடிவுக்கு கொண்டு வருவார், அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார், உயிர்களைக் காப்பாற்றுவார்.

அவர் மனிதாபிமானமிக்கவர், அவரின் முழு சக்தியால் மலைகளைக்கூட நகர்த்தும் வல்லமை மிக்கவர், அவரைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நோபல் குழுவினர் அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டனர்” எனப் பதிவிட்டுள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button