News
இஸ்ரேல் – காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி, இத்தோடு சேர்த்து 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்திவிட்டேன் ; ட்ரம்ப்

இஸ்ரேல் பாராளுமன்றில் சற்றுமுன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றியுள்ளார்.
இஸ்ரேல் – காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதன்போது தெரிவித்தார்.
காஸா போரில் இஸ்ரேலின் ஆதிக்கமே போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது என தெரிவித்த ட்ரம்ப், இதோடு சேர்த்து 8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த அமைதி ஒப்பந்தம் மத்திய கிழக்கிற்கு ஒரு புதிய தொடக்கத்தை குறிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்



