News

நான்கு அமைச்சர்கள் இரண்டு பிரதி அமைச்சர்கள் இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுள்ளமை தெரியவந்தது !!

கடந்த மாதம் வரை நான்கு அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் தங்கள் அமைச்சகங்களிலிருந்து பெறும் எரிபொருள் கொடுப்பனவுடன் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவைப் பெற்று வருகின்றனர் என “அருன” செய்தி வெளியிட்டுள்ளது.

வஸந்த சமரசிங்க,ராமலிங்கம் சந்திரசேகரன்,அனில் ஜயந்த ,தம்மிக பட பெந்தி ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாமல் கருனாரத்ன மற்றும் உபாலி சமரசிங்க பிரதி அமைச்சர்கள் அமைச்சர்களுக்கு வழங்கபடும் எரிபொருள் கொடுப்பனவுக்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபடும் எரிபொருள் கொடுப்பனவையும் பெற்றுள்ளதாக “அருன” செய்தி வெளியிட்டுள்ளது.

சில அமைச்சர்கள் ஆகஸ்ட் மாதம் வரையும் சிலர் ஜூலை, ஜூன், மே , ஏப்ரல் , மார்ச் மாதங்கள் வரை இரண்டு எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஜூலை மாதம் வரை இரண்டு எரிபொருள் கொடுப்பனவுளை பெற்றுள்ளதாக அருன” செய்தி வெளியிட்டுள்ளது.

Recent Articles

Back to top button