News
போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியின் சட்டத்தரணி தற்போதய அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார் !

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியின் வழக்கை, அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்தியதாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கூறுகிறார்.
சட்ட விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கத்தில் தற்போது மிகவும் சக்திவாய்ந்த நபர் அவர் தான் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழக்கு அறிக்கைகளுடன் விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.
தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.



