வாக்குவாதம் முற்றியதால் மகனை ஏர் ரைபிள் துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது – இளம் வயது மகன் வைத்தியசாலையில் அனுமதி

பல்லம பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, அவர் தனது மகனை ஏர் ரைபிள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் அனமடுவ, ஆடிகள், கடயந்தலுவ பிரதேசத்தில் நேற்று (18) இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 17 வயதுடைய இளைஞன், அனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தந்தையும் மகனும் இடையே ஏற்பட்ட சண்டைக்குப் பின்னரே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தந்தை, அனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



