இலங்கைக்கு வந்து தென் மாகாணத்தில் மாதம் ஒன்றரை இலட்சம் வாடகை செலுத்தி வீட்டினுள் குஷ் போதைப் பொருள் பயிரிட்டு வந்த வெளிநாட்டவர் கைது

அக்மீமன பிரதேசத்தில் வாடகை வீட்டில் ‘குஷ்’ பயிரிட்ட பெலாரஸ் நாட்டவர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அந்த வீட்டின் இரண்டு அறைகளுக்குள் நுட்பமாக ‘குஷ்’ பயிர்ச்செய்கையை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்காகவே அவர் இதனைப் பயிரிட்டுள்ளார் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரு வைத்தியருக்குச் சொந்தமானது என்றும், சந்தேகநபர் அந்த வீட்டை வாடகை அடிப்படையில் பெற்றுள்ளார் என்றும், அதற்காக அவர் மாதாந்தம் ரூபா ஒன்றரை இலட்சம் வாடகைப் பணத்தைச் செலுத்தியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தென் மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ஜயலத் அவர்களின் பணிப்புரையின் பேரில் காலி மாவட்ட குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா மேற்கொண்டு வருகிறார்.



