News

பொத்துவிலில் இயங்கிவந்த இஸ்ரேலிய “சபாத் இல்லம்” மூடப்பட்டதற்கு ஜனாதிபதியை நேரில்சந்தித்து நன்றி தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் அப்துல் வாஸித் M P

இன்று (21) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக அவர்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார்

பொத்துவில், சர்வதோயபுர கிராமத்தில் இயங்கி வந்த இஸ்ரவேலர்களின் “சபாத் இல்லம்” கடந்த 10 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டதற்கு, இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பொத்துவில் மக்கள் சார்பாகவும், மாவட்ட மக்கள் சார்பாகவும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இனிமேல் இத்தகைய செயல்கள் இடம்பெறாது, அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்பதற்கான தனது எதிர்பார்ப்பையும் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

ஊடகப் பிரிவு
அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button