News
மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழப்பு.
துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டு மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கித்தாரி மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் பிரதேச சபைத் தலைவரின் உத்தியோகபூர்வ அறைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிகள், பிரதேச சபை தலைவரிடம் கடிதம் ஒன்றில் கையொப்பம் பெறுவது போன்று பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.



