88/89 போலவே மீண்டும் நாட்டில் ஆயுதக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது ; பேருவளை பிரதேச சபை SJB உறுப்பினர் ஹுனைப் எம் ஹனீப்

88/89 போலவே மீண்டும் நாட்டில் ஆயுதக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.
நாட்டில் முன்னொறு காலமும் இல்லாதது போல ஆயுதக் கலாச்சாரம் மாலிமா அரசாங்கத்தின் கீழ் தலைதூக்கியுள்ளது. பாதாள உலகத்தினரை இல்லாமல் செய்வதாக கூறி மக்களுகளிடம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மாலிமா அரசாங்கத்தினால் வாக்களித்த மக்களையும் பாதுக்க முடியாத நிலை நாட்டில் உருவாகியுள்ளது.
தினம் ஒரு துப்பாக்கிச்சூடு நடைபெறும் அளவுக்கு நாட்டு நிலமை மாறியுள்ளது.
ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் வெற்றிபெறச் செய்யப்பட்டு வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட லஸன்த விக்ரமசேகர பொதுமக்களை சந்திக்கும் தினத்தில் தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சந்தர்ப்பத்திலே துப்பாக்கிதாரியினால் சுட்டுக்கொலை செய்யபடும் அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு நிலமை மாறியுள்ளதென்றால், இந்த நாட்டிலே சாதாரண குடிமகனின் பாதுகாப்பு பற்றி என்ன கூறுவது?
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டிய ருஷ்திக்கு ஸஹ்ரான் குழுவினருடன் தொடர்பு உள்ளதாக பாராளுமன்றத்தில் பச்சைப்பொய்யை கூறிய அதே மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்கள், சுட்டுக் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தவிசாளர் லஸன்த விக்ரமசேகரவுக்கும் ஹரக் கடாவுக்கும் தொடர்பு உள்ளதாக பாராளுமன்றத்தில் கூறுகிரார் இவரின் கூற்றுக்கள் தொடர்பில் மக்களிடம் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வீதியிலே செல்பவர்கள் எல்லோரும் துப்பாக்கியுடன் தான் செல்கிறார்களா என்று சிந்திக்கும் அளவுக்கு நாட்டின் பாதுகாப்பு நிலமை மோசமாக உள்ளது.
நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஆனால் மாலிமா அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு சீர்குழைந்துள்ளதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
ஹுனைப் எம் ஹனீப்
பேருவளை பிரதேச சபை உறுப்பினர்



