News
தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் இடம்பெற இருந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்த கிராண்ட்பாஸ் பொலிஸ் !

தப்லீக் ஜமாத்தினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றினை நடத்த கிராண்ட்பாஸ் பொலிஸார் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தப்லீக் ஜமாத்தினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஒக்டோபர் 26 ம் திகதி ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வில் நாடு தழுவிய ரீதியில் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள இருந்ததாக கூறப்பட்டது.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என கிராண்ட்பாஸ் பொலிஸார் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதனையடுத்து குறித்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.



