News
இன்று 26 ம் திகதி நடக்கவிருந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சி வேறு தினத்திற்க்கு பிற்போடப்பட்டது !


தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் இன்று 26 ம் திகதி இடம்பெற இருந்த நிகழ்ச்சியை இன்று நடத்தவேண்டாம் என கிராண்ட்பாஸ் பொலிஸாஎ அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் குறித்த நிகழ்ச்சி வேறு தினத்தில் இடம்பெறும் மர்க்கஸ் தரப்பு தகவல் வழங்கியுள்ளது..
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தப்லீக் ஜமாத்தினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒக்டோபர் 26 ம் திகதி ஜமாத்தின் தலைமையகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வில் நாடு தழுவிய ரீதியில் ஜமாத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ள இருந்ததாக கூறப்பட்டது.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக குறித்த நிகழ்ச்சியை குறித்த திணக்தில் நடத்த வேண்டாம் என கிராண்ட்பாஸ் பொலிஸார் அறிவுருத்தல் வழங்கிய நிலையிலத குறித்த நிகழ்ச்சியை வேறு தினத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தப்லீக் ஜமாத் தரப்பு கூறியுள்ளது.



