News

மாமனாரால் எயார் ரைபிள் துப்பாக்கியால் சுடப்பட்டு மருமகன் உயிரிழப்பு #இலங்கை

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில், தனிப்பட்ட தகராறு காரணமாக 57 வயதுடைய நபர் ஒருவர் தனது மாமனாரால் ஏர் ரைபிள் (Air Rifle) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று இரவு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.


இஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அந்த நபர், பலத்த காயங்களுடன் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button