எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக இணைந்து மக்களின் குரல் என்ற பேரணியை நுகேகொடையில் நவம்பர் 21 ஆம் திகதி நடத்த போவதாக அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தேசிய சுதந்திர முன்னணி (NFF) மற்றும் பிற கட்சிகளை உள்ளடக்கிய கூட்டு எதிர்க்கட்சி, நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் இருந்து தொடங்கும் கூட்டுப் பிரச்சாரத்தை இன்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லருக்கு எதிராக ஒன்றுபட்ட நட்பு நாடுகளைப் பின்பற்றுவதாகக் கட்சிகள் அறிவித்தன.
நாடு முழுவதும் தொடர் பேரணிகளை நடத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர்
அரசியல் வட்டாரங்களின் தகவல் படி, ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சமாகி ஜன பலவேகய (SJB), ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP), பொதுஜன ஐக்கிய முன்னணி (Podujana Eksath Peramuna) உட்பட 30 இற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் “மக்களின் குரல் (People’s Voice)” பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே மேடையில் கொண்டுவருவதே இந்தப் பேரணியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்வின் அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



