போதைப்பொருள் பாவனை மற்றும் மதுபாவனை ஆகிய இரண்டும் இலங்கையில் அதிகம் காணப்படும் மாவட்டமாக யாழ்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார்.
மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “விடியல்” நூல் வெளியீட்டு விழா மாற்றம் அறக்கட்டளை இயக்குனர் எஸ். பெனிக்சன் தலைமையில் அண்மையில் மாவட்டச்செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினரான கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாற்றம் மற்றும் விடியல் இரண்டுமே மிகவும் பொருத்தப்பாடுடைய தலைப்பாக காணப்படுவதாகவும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் விடியல் என்ற நூல் இரண்டுமே சமூகத்திற்கு தேவைப்பாடுடையதும் வேண்டப்படுகின்ற விடயமாக இருக்கின்றது, சமூகத்தில் மாற்றத்தையும் விடியலையும் ஒன்றாக காண வேண்டும் என்பதற்காக இவ்”விடியல் “என்ற நூலை வின்சன் பற்றிக் அடிகளாா் வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்ததோடு இந் நூல் இளம் சந்ததிகளின் வாழ்வில் மாற்றத்தையும் விடியலையும் ஏற்படுத்தவேண்டும்
வின்சன் பற்றிக் அடிகளாா் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர தன்னாலான பணிகளை யாழ்ப்பாண மாவட்டம் மட்டுமன்றி கிளிநொச்சி, மன்னாா் போன்ற மாவட்டங்களிலும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
மாற்றம் அறக்கட்டளை நிறுவனம் சிறப்பாக தனது பணியை மேற்கொண்டு வருவதாகவும் விடியல் என்ற நூலை 30வது நூலாக வெளியிட்டுள்ளதாகவும் இலகுவாக வாசிக்க விளங்கக்கூடிய வகையில் நூல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சமூகத்திற்கு தேவையான விடயத்தை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.
அத்தோடு போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் அதிகமாக நுகர்கின்ற தன்மை காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சமூகத்தின் மாற்றத்தில் பாரிய பங்களிப்பு இருப்பதாகவும் கடமைக்கு மேலதிகமாக மாற்றத்தை கொண்டு வர திடசங்கற்பம் பூண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமென்றும் ஒவ்வொருவரது வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா்



