ஹிஸ்புல்லாவை ஏமாற்ற முயற்சித்ததும்,
கானா நாட்டு பொலிஸ், நீதிமன்றம் என்பன இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டதும் உறுதியாகி உள்ளதால் இரண்டு மில்லியன் டொலர் மோசடி விவகாராத்தின் உண்மைத் தண்மையை அரசு விசாரிக்க வேண்டும்

கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக
பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை மறுத்து ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் ஹிஸ்புல்லா கானாவுக்கு போனதையோ ஏமாற்ற முனையப்பட்டதையோ அவர் மறுக்கவில்லை.
ஆனால் தனது சவூதி நண்பர்களுடன் கானா போனதையும் தன்னை ஏமாற்ற முனைந்ததையும் ஏற்றுக்கொள்கிறார்.
இதோ ஹிஸ்புல்லா தரப்பு அறிக்கை:
உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.
இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அறிக்கையின் படி ஹிஸ்புல்லாவை ஏமாற்ற முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
சும்மா சாதாரண காரணத்துக்காக ஏமாற்றினால் ஏன் பொலிசில் முறைப்பாடு செய்ய வேண்டும்?
வியாபார மோசடி சம்பந்தமான முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளதால்தான் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.
அத்துடன் கானா நீதிமன்றம் எந்த வியாபார கொடுக்கல் வாங்கலும் இன்றி அந்நாட்டவரை கைது செய்யுமா?
இரண்டு மில்லியன் டொலர் மோசடி உண்மையா, இப்பணம் எவ்வாறு கானா கொண்டு செல்லப்பட்டது உட்பட இவை பற்றி இலங்கை அரசு கானா நாட்டு நீதி அமைச்சுடன் தொடர்பு கொண்டு ஏன் கைது செய்யப்பட்டனர் என்பது பற்றி அறிந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஸ்தாபக தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்



