News
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நகர சபை உறுப்பினர் ஒருவர் காயம் – இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுதாவின் உறவினர் என தெரிவிக்கபடுகிறது

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுதாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.
காயமடைந்த நபர் அம்பலாங்கொடை நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  
 
 


