News
1.185 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி NPP நகரசபை உறுப்பினர் குறித்தும் விசாரணை !!

அனுராதபுரத்தின் இபலோகம பகுதியில் போதைப்பொருள் தொகையுடன் கைது செய்யப்பட்ட அதிபதின் மனைவி தேசிய மக்கள் சக்தி பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலாவின் குறித்தும் பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
பேலியகொடையில் உள்ள அவரது வீட்டை போலீசார் சோதனை செய்த போதிலும், அங்கு சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை.
இந்த உறுப்பினர், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என்பதை போலீசார் இப்போது வெளிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.CN



