News
பாகிஸ்தானில் இடம்பெறும் T20 தொடருக்கான இலங்கை கிரிக்கட் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் சேர்த்துக்கொள்ளப் பட்டார்.

பாகிஸ்தானில் இடம்பெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் லெக் ஸ்பின்னர் விஜயகாந்த் வியாஸ்காந்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் சேர்த்துள்ளனர்.
ஆசியக்கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் விளையாடிய வியாஸ்காந் கட்டாரில் இருந்து நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட தொடை தசை இறுக்கத்திலிருந்து வனிந்து ஹசரங்கா இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



