News
தங்காலை நகர சபை வரவு செலவு திட்டமும் தோல்வி !

தேசிய மக்கள் சக்தி கட்சியால் நிர்வகிக்கப்படும் தங்காலை மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனால் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு எதிர்க்கட்சியின் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.



