News
இன்று காலை தெற்கு கடலில் சிக்கிய பாரிய அளவிலான போதைப்பொருள் விவகாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கைது

நாட்டின் தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் பன்னலவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அப் பொதிகளில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் இருந்துள்ளதோடு, T-56 ரக துப்பாக்கிகள், 5 ரிவோல்வர்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்



