News

16 வயது மகள் மற்றும் 40 வயது தாய் மீது நேற்றிரவு ஆ*சிட் வீச்சு… தாய் உயிரிழப்பு மகள் காயம் #இலங்கை

அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நேற்று (20) இரவு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகனை அயகம வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.



வைத்தியசாலையில் 40 வயதான குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 



அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.



உயிரிழந்த பெண்ணின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க்பபட்டுள்ளது.



சந்தேக நபர்களை கைது செய்வதற்காக அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button