News
JVP பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராக LTTE கொடிகளுடன் ஈழ ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் !

தற்போது பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அந்த நாட்டில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார்.அது அந்த நாட்டில் வசிக்கும் தழிழ் ஈழ ஆதரவாளர்களிடமிருந்து வந்ததுள்ளது.
திரு. டில்வின் சில்வா ஒரு பொதுக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த போராட்டக்காரர்கள் அவர் பயணித்த காரைச் சுற்றி வளைத்து, இந்தப் போராட்டத்தில் ஈழக் கொடிகளை ஏந்தினர்.
இருப்பினும், ஏற்பாட்டாளர்கள் செயலாளரை சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் பல பேரணிகளில் உரையாற்றுவதற்காக திரு. டில்வின் சில்வா இந்தப் பயணத்தில் கலந்து கொண்டுள்ளார் உள்ளார்.



