News
தோழர் அசோக ரன்வல தமது கல்விச் சான்றிதழை முன்னிலைப்படுத்தாததை நாம் ஒரு குறையாக காணவில்லை !

தாம் எதிர்பார்த்ததை போல முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல அவர்களுக்கு தன்னுடைய கலாநிதி சான்றிதழை முன்னிலைப்படுத்த முடியாமல் போனதாக ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர குறிப்பிட்டார்.
“நாம் எதிர்பார்த்ததை போல முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல அவர்களுக்கு தன்னுடைய கலாநிதி சான்றிதழை முன்னிலைப்படுத்த முடியாமல் போனது.அவர் பாரிய வேலைதிட்டங்களை முன்னெடுத்த ஒரு நல்ல மனிதர்.அது அவரின் மூலம் இடம்பெற்ற ஒரு குறைப்பாடாக நாம் காணவில்லை.அதை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவதில் அர்த்தம் இல்லை.நாமலின் கல்விச்சான்றிதழ் பற்றியோ தோழர் அசோக ரன்வலவின் கல்விச்சான்றிதழ் பற்றி பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.



