News

ஹெலிகொப்டர் விபத்தில் விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இன்று (30) பிற்பகல் லுனுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழந்துள்ளார்.


விங் கமாண்டராக இருந்த அவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.


இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய விமானி ஆவார்.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்துக்குள்ளானது பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஆகும்.
பேரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட நிவாரணப் பணிகளை வழங்குவதற்காக இன்று (30) காலை முதல் அது ஒரு பெரிய பணியைச் செய்து வந்தது.


லுனுவில பாலத்திற்கு அருகில் இருந்த குழுவினருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


பாலத்தின் மீது மக்கள் கூடியிருந்ததால், பணியை நிறைவு செய்ய முடியவில்லை, இதன் காரணமாகப் பாதுகாப்பாகத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றது.


இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த மேலும் 4 பேர் தற்போது மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button