வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு உதவும் இலவச ஆன்லைன் கல்வி இணையதளம் – எம்கல்வி.lk (emkalvi.lk)

சமீபத்தில் இலங்கையின் பல பகுதிகளை தாக்கிய கடும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களையும் குறிப்புப் புத்தகங்களையும் இழந்துள்ளனர்.
இது மாணவர்களின் கல்வி முன்னேற்றாத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தக் கடின சூழலில், தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு emkalvi.lk இணையதளம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
குறிப்பாக O/L மற்றும் A/L மாணவர்களுக்கு தங்கள் பாடங்களை விரைவாக மீட்டல் செய்வதற்கும், மாதிரி வினாக்கள் மற்றும் கடந்தகால வினாக்களை ஆன்லைன் பயிற்சிகளாக செய்வதற்கும் இந்த தளம் உதவுகின்றது. ஒவ்வொரு பாடத்திற்கும் அலகுரீதியாக வடிவமைக்கப்படுள்ள இப்பயிற்சிகள் உடனுக்குடன் விடைகளை சரிபார்க்கும் வகையில் நவீன முறையில் வடிவமைக்க்ப்பட்டுள்ளதால் மாணவர்கள் விருப்பத்துடன் இப்பயிற்சிகளில் ஈடுபடலாம். மேலும் உடனடி முடிவுகள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான கேள்விகளுக்கு மேலதிக விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளதால் இது மாணவர்களின் புரிதலை மேலும் மேம்படுத்தும்.
அத்துடன் இணைய விளம்பரங்கள் எதுவும் தோன்றாத வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எந்த இடர்களும் இல்லாமல் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.
மொபைல் மற்றும் கணினி வழியாக எங்கிருந்தும் பயன்படுத்தக்கூடிய இந்த கல்விசார் இணையதளம் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
இலாப நோக்கமின்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல மாணவர்களுக்கும் இலவச இணையவழி கல்வியை வழங்குதல் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.



