News

100 ரூபாய்க்கு விற்க வேண்டிய தண்ணீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்ற வர்த்தகருக்கு பத்து லட்சம் அபராதம் விதித்தது நீதி மன்றம் #இலங்கை


100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய தண்ணீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்றதால், பத்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக லங்காதீப செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், செமன் டின் ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு மேல் வாங்கியதற்காக ஒன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இங்கு அமுல்படுத்தப்படுகிறது. அனைத்தும் நீதியாக நடக்க வேண்டும்.
இந்த அறிக்கையை இரத்தினபுரி லசந்த நிரோஷன் பெரேரா மற்றும் பலங்கொடை நாலக ஜே. ஹெட்டியாரச்சி ஆகியோரே கொண்டு வந்துள்ளனர்.

அதிகபட்ச சில்லறை விலையான 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய குடிநீர் போத்தலை 400 ரூபாய்க்கு விற்ற பலங்கொடை பெலிஹுல் ஓயா பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதிக்கே இந்த அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

பலங்கொடை நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி திருமதி பாக்கியா டில்ருக்ஷி விக்ரமசிங்க அவர்கள் பத்து லட்சம் ரூபாய் (LKR 1,000,000) அபராதம் விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.



குடிநீர் போத்தலின் கட்டுப்படுத்தப்பட்ட விலை:
* 500 மில்லி குடிநீர் போத்தலுக்கு: 70 ரூபாய்
* ஒரு லீட்டர் குடிநீர் போத்தலுக்கு: 100 ரூபாய்
* ஒன்றரை லிட்டர் குடிநீர் போத்தலுக்கு: 130 ரூபாய்
ஆகும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button