News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வழங்குவதற்காக, பாகிஸ்தான் மேலதிகமாக 200 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை அனுப்பியது

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, பாகிஸ்தான் கூடுதலாக 200 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பவுள்ளது.

பாகிஸ்தானின் கடல்சார் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் முகமது ஜுனைத் அன்வர் சவுத்ரி இன்று இதனை தெரிவித்தார்.

கொழும்பில் இலங்கைத் தலைவர்களுடனான சந்திப்புகள் மற்றும் சம்பவ இடத்தில் நிலைமையை மதிப்பிட்ட நிலையில், இந்த நிவாரண வழங்கலுக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 200 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிட்வா சூறாவளிக்குப் பிறகு பாகிஸ்தானின் ஒற்றுமையை தெரிவிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் அன்வர் சௌத்ரி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button