முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வல, மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதால் தான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக சமூக வலைகளில் வரும் பதிவுகளுக்கு பொலிஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வாலா, சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச ஊடகமான தினமினவின்படி, விபத்து நடந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுபோதையில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள், பொலிஸ் விசாரணைகளை அடுத்து பொய்யானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர் ரன்வல கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அரச ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து வியாழக்கிழமை (11) மாலை சப்புகஸ்கந்த, டெனிமுல்ல பிரதேசத்தில் ரன்வாலா ஓட்டிச் சென்ற ஜீப் வண்டிக்கும் மற்றுமொரு மோட்டார் வாகனத்திற்கும் இடையே நேருக்கு நேர் மோதியதனால் ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்த 25 வயதுடைய பெண், அவரது சுமார் ஆறு மாதக் குழந்தை மற்றும் 55 வயதுடைய ஒரு வயோதிபப் பெண் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைக்கு மேலதிக சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.



