இந்த அனர்த்த காலத்தில் அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்க அனுபவசாலி ரணில் விக்ரமசிங்க தயாராகவே இருக்கிறார் – ஆலோசனை வழங்குவார் ஆனால் இந்த அரசாங்கத்தில் எந்தவிதமான பதவிகளையும் பெற்றுக்கொள்ள அவர் தயாரில்லை.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்துக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகுந்த அனுபவமும், அறிவும் கொண்டவர். நாட்டைப் பாதிக்கும் அனர்த்தங்களை கையாள்வதில் அவர் தனது ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளார்.
ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருந்தாலும், அவரோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களோ தற்போதைய அரசாங்கத்தில் எந்தவிதமான பதவிகளையும் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை.
தங்களது தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, அனர்த்த முகாமைத்துவ பணிகளில் அரசாங்கத்துக்கு உதவ ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாங்களும் தயாராக இருக்கிறோம்” என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.



