News

நாட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்ட  நிலையிலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை – இம்மாதம் முதல் இரு வாரங்களிலேயே 93 ஆயிரம் பேர் வருகை

டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 90,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 93,031 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் அதிகமானோர் இந்திய நாட்டவர்கள் ஆவர்; அந்த எண்ணிக்கை 21,156 ஆகும்.

இதற்கு மேலதிகமாக ரஷ்யா, பிரித்தானியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதற்கமைய, இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,196,624 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button