News
வெல்லம்பிட்டி பகுதியில் சுமார் 33 கோடி ரூபாய் பெறுமதியான 20 இலட்சம் சிகரெட்டுக்களை ஒளித்து வைத்திருந்த துறைமுக ஊழியர்கள் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 330 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் மூன்று துறைமுக அதிகாரசபை ஊழியர்களும் அடங்குவர்.
கலால் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, வெல்லம்பிட்டி பகுதியில் இந்த சிகரெட் தொகுதியையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
2,030,000 சிகரெட்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக கலால் துறை தெரிவித்துள்ளது.

