News

பஹ்ரைனில் இருந்து வந்தவரின் பயணப் பொதியில் விளையாட்டு துப்பாக்கி இருந்ததற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது.

பஹ்ரைனில் இருந்து, ரிவால்வர் போன்ற விளையாட்டு துப்பாக்கி ஒன்றை கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வத்தளை, எண்டேரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

குறித்த நபர் பஹ்ரைனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (21) அன்று நாட்டிற்கு வந்திருந்துள்ளதுடன் அவரது பயணப் பொதிகளை சோதனையிட்ட போது விளையாட்டுத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button