News

பாடசாலை நேரத்தை நீடிக்கவோ பாடவேளையை 50 நிமிடங்கள் வரை அதிகரிக்கவோ கூடாது –  எடுக்கப்பட்ட  தீர்மானங்களை உடனடியாக மீளப்பெறுங்கள் என அதிபர் சங்கம் வேண்டுகோள்

புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் கீழ், பாடசாலை நேரத்தை நீடிப்பது மற்றும் ஒரு பாடவேளையை 50 நிமிடங்கள் வரை அதிகரிப்பது போன்ற தீர்மானங்களை உடனடியாக மீளப்பெறுமாறு அதிபர் தரச் சங்கம் (Grade Union of Principals) அறிவித்துள்ளது. 


இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அச்சங்கம், 6-ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதன் மூலம் 07, 08, 09, 10, 11-ஆம் தரங்கள் மற்றும் உயர்தர வகுப்புக்களில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 


அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் போதிய அளவு கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்த்து, நெகிழ்வுத்தன்மையுடன் இந்தச் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல், எதிர்வரும் ஜனவரி 5-ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை  நீடிக்க நடவடிக்கை எடுத்தால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அதிபர் தரச் சங்கம் எச்சரித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button