மஹிந்த ஆட்சி தவிர அனைத்து ஆட்சியிலும் நம் சமூகத்துக்கு அதிக தீமைகள் ஏற்பட்டன – முஸ்லிம் சமூகத்துக்கு ஏராளமான நன்மை செய்த மஹிந்த எனக்கு தனிப்பட்ட வகையில் எந்த உதவியும் செய்யவில்லை என்ற கோபம் எனக்குள்ளது ; முபாரக் மவ்லவி

இலங்கையின் அனைத்து ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு சில நல்லதும் பல கெட்டதும் நடந்தன.
நமது சமூகம் என்ற நிலையிலிருந்து பார்க்கும் போது மஹிந்த ஆட்சி தவிர அனைத்து ஆட்சியிலும் நம் சமூகத்துக்கு அதிக தீமைகள் ஏற்பட்டன.
மஹிந்த ஆட்சியிலும் தீமைகள் நடந்த போதும் ஒப்பீட்டளவில் நிறைய நன்மைகள் முஸ்லிம் சமூகத்துக்கு நடந்தன.
ஆனால், ஜே ஆர், பிரேமதாச, சந்திரிக்கா, ரணில், மைத்திரி ஆட்சிக்கு முஸ்லிம்கள் கணிசமான அளவு சுமார் 75 வீதம் ஓட்டு போட்டார்கள்.
மஹிந்த ஆட்சிக்கு 10 வீதமே ஓட்டு போட்டார்கள். இந்த ஓட்டை வைத்தே நாம் ஒப்பீட்டளவில் ஆட்சியை நமக்கான சாதக பாதகத்தை ஆராய வேண்டும்.
மஹிந்த ஆட்சியிலும் பிரேமதாச, மைத்திரி, சந்திரிக்கா ஆட்சியை போன்று பல விடயங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடந்தன என்பது உண்மை. ஆனால் நலவுகள் என்ற வகையில் யாரின் ஆட்சியிலும் கிடைக்காத பல நன்மைகள் மஹிந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்தன.
நன்மைகள் என பார்த்தால்,
1. 1992ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு மௌலவிக்கேனும் ஆசிரிய நியமனம் வழங்கப்படவில்லை. அஷ்ரப் அமைச்சராக இருந்தும் முடியவில்லை.
இது விடயத்தை 2005ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலமா கட்சி அரசியலாக்கி மஹிந்தவை ஆதரிப்பதற்காக பேரம் பேசியதால் 2010ம் ஆண்டு 150 மௌலவிமாருக்கு அரபு, இஸ்லாம் ஆசிரிய நியமனம் கிடைத்தது. அதன் பின் இன்று வரை ஒருவருக்கும் கிடைக்கவில்லை.
2. புலிகளின் யுத்தத்தால் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின் வெளியேற்றப்பட்டனர். மஹிந்த அரசு யுத்தத்தை வென்று வட மாகாண முஸ்லிம்கள் மீள் குடியேற உதவியது.
3. மூதூர் முஸ்லிம்கள் மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக மஹிந்த தலையிட்டு அவர்கள் திரும்பிச்செல்ல வழி வகுத்தார்.
இப்படி பலவற்றை சொல்லலாம்.
இப்படியெல்லாம் நம் சமூகத்துக்கு நன்மை செய்த மஹிந்த தனிப்பட்ட வகையில் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற கோபம் எனக்கு இன்னமும் உண்டு. குறைந்தது எமது கட்சிக்காவது உதவி செய்து அதை பலப்படுத்தியிருக்கலாம். அதையும் செய்யாமல் ஏமாற்றினார். இது விடயத்தில் நான் மஹிந்தவை நன்றி கெட்டவராகவே நான் மஹிந்தவை பார்க்கிறேன்.
ஆனால் மஹிந்தவை எதிர்த்த ஹக்கீமுக்கும் அவரின் கட்சிக்கும் அனைத்து பதவிகளையும் கொடுத்தார்.
ஆனாலும் எனக்கு மஹிந்த உதவி செய்யாவிட்டாலும் சமூகத்துக்கு பல உதவிகள் செய்தமைக்காக நான் உண்மை பேசும் அரசியல்வாதி என்பதால் இதை எழுதுகிறேன்.
முபாறக் முப்தி
ஊடக பேச்சாளர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.



